திருவிக கல்லூரியில் விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவாரூர், ஜுன் 26- சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் ஜுன் 26-ஐ முன்னிட்டு, திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பிரச்சாரம்-பேரணி நடைபெற்றது. திரு.வி.க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்ட சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஸ்ரீ தியாகராஜா கல்வியியல் கல்லூரி ஆசிரியர், பயிற்சி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.