புகைப்படக் கலைஞர்களின் திறமையை போற்றும் விருதுகள்
சென்னை, ஆக. 29- ஸ்மார்ட்போன் லென்ஸ் மூலம் உலகை புதிய கண்ணோட்டத்தில் புகைப்படும் எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் விவோ இமேஜின் விருதுகளுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் புகைப்பட சமூகத்திற்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதை விவோ நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட தனி நபர்கள் என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 6 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அதாவது இயற்கை மற்றும் நிலப்பரப்பு, இரவு மற்றும் பகல், கட்டிடக்கலை, இயக்கம், உருவப்படம் மற்றும் தெரு மற்றும் கலாச்சாரம் ஆகிய பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தங்கள் புகைப்படங்களை நவம்பர் 30 வரை பதிவேற்றம் செய்யலாம். வெற்றியாளருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், அந்தந்த பிரிவுகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு விவோ எக்ஸ்200 புரோ ஸ்மார்ட்போனும் பரிசாக வழங்கப்படும் என விவோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
நீண்டநேர பயன்பாட்டிற்கான பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போன்
சென்னை, ஆக. 29- புதுமையான உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ, உயர்ரக இமேஜிங் தொழில்நுட்பம், நீடித்த உழைப்பு, பிரீமியம் செயல்திறன் 10x டெலிபோட்டோ போர்ட்ரெய்ட் மற்றும் 3x பெரிஸ்கோப் ஜூம் திறன்களுடன் முதன்மை நிலை இமேஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 4 செயலி மூலம் இயக்கப்படும் விவோ டி4 புரோ, எப்போதும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம் தலைமுறையினருக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. விவோ டி4 புரோ 5ஜி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கார்டுடன் ரூ.27,999க்கும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கார்டுடன் ரூ.29,999க்கும், 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடன் ரூ.31,999க்கும் கிடைக்கும்.
அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளுக்கு பரிசு வேளாண் அதிகாரி தகவல்
வேலூர், ஆக.29- மாநில அளவில் பயிர்விளைச்சல் போட்டியில் அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளுக்கு ரூ.2.5லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது என்று வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் கூறியதாவது, தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிகளவில் உற்பத்தியை பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சம் 2ம் பரிசாக ரூ.1.5 லட்சம். 3ம் பரிசாக ரூ.1 லட்சம் என மொத்தம் 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிர் விளைச்சல் போட்டியில் அறுவடைக்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு மார்ச் 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26ம் ஆண்டில் கம்பு, ராகி, சாமை, துவரை, உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் சாகுபடியும், சாமை 1 ஏக்கர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். பயிர் விளைச்சல் போட்டிக்கு நுழைவு கட்டணமாக ரூ.150 மட்டும் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
பைக் மீது கார் மோதி தம்பதி பலி
சென்னை,ஆக.29- பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு, பள்ளிக்குப்பம், ராஜிவ் நகரைச் சேர்ந்தவர் அறிவரசன் (41). தனியார் கால்சென்டர் ஊழியர். இவரது மனைவி சரண்யா (36), திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். தம்பதிக்கு இரட்டை மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சரண்யாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு, வியாழனன்று காலை ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அறி வரசன் சென்றுள்ளார். ஆவடி, வசந்தம் நகர் அருகே சென்றபோது, பைக் மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் அறிவரசன், சரண்யா இரு வரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான தம்பதியின் சட லங்களை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், காரை ஓட்டிவந்த அரசு மருத்துவர் பாரி மார்க்ஸ் என்பவரும் படு காயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.