இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை சிவானந்தபுரம் 2 ஆவது கிளையின் சார்பில் குடியரசு தினத்தையொட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று, மருத்துவ சேவைக்கான விருதை டாக்டர் ஆர். குருசாமி மற்றும் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை எஸ்.எம்.எஸ்.மணி ஆகியோருக்கு வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்வில் பாலமுருகேஷ் பாபு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் மேற்கு கமிட்டி செயலாளர் சண்முகசுந்தரம், ஆர்.செந்தில்குமார், ஏ.உஷா, ஜெயகாந்தன், வாலிபர் சங்க கிளை செயலாளர் முத்துமுருகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.