ரீல்ஸ் வெளியிட்ட விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்
ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் ராம் மோகன் நாயுடு. மோடி 3ஆவது முறையாக பிரதமர் பதவியில் அமர தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்து உதவியதால், அக்கட்சியின் மூத்த தலைவரான ராம் மோகன் நாயுடுவுக்கு அமைச்சர் பதவி வழங்கினார் மோடி. விமான விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த போது ராம் மோகன் நாயுடு சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவேற்றினார்.அதுவும் பின்னணி இசையைக் கொண்ட ஒரு வீடியோ ஆகும். கொடிய துயரச் சம்பவத்தில் ரீல்ஸ் பதிவேற்றிய ராம் மோகன் நாயுடுவுக்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வருகிறது.