மீட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர ஆட்டோ தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்
பெரம்பலூர், செப்.22- தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) 10 ஆவது மாநில மாநாட்டின் பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை பெரம்ப லூரில் நடைபெற்றது. ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆர்.தெய்வராஜ் மாநாட்டுக் கொடி ஏற்றினார். செயல் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் எஸ். அகஸ்டின் வரவேற்புரையாற்றி னார். சிஐடியு மாநில துணைத் தலைவர் கருப்பையன் பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். வேலை-ஸ்தாபன அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.சிவாஜி வாசித்தார். வரவு-செலவு அறிக் கையை பொருளாளர் இரா.உமாபதி சமர்ப்பித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே. மகேந்தி ரன் நிறைவுரையாற்றினார். மாநாட் டின் வரவேற்பு குழுச் செயலாளர் ஏ.ரெங்கநாதன் நன்றி கூறினார். தீர்மானங்கள் ஆன்-லைன் அபராதத்திலிருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு கொடுக்க வேண்டும். புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழகத்தில் அமல் படுத்தக் கூடாது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை உடனே துவக்க வேண்டும். பைக் டாக்ஸியை உடனடி யாக தடை செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் ஓட்டுநர் களுக்கு நல வாரியத்தின் மூலம் போனஸ் வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளி லும் ஆட்டோ நிறுத்த பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும். விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாநிலத் தலைவராக வி.குமார், மாநில செயல் தலைவராக பால சுப்பிரமணியம், பொதுச் செயலாள ராக எம்.சிவாஜி, பொருளாளராக ஈ.உமாபதி, துணைத் தலைவர் களாக தெய்வராஜ், முகமது அனிபா, முரளி, கண்ணன், கபாலி, சரவணன், மணிகண்டன், பாண்டியன், துணைச் செயலாளர்களாக கே. விஜயகுமார், எஸ்.விஜயகுமார், சாந்தி, ரெங்கநாதன், வன்னிய பெரு மாள், ராஜேந்திரன், சோபனராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.