பொதுப்பாதையை மீட்கப் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?
அரியலூர் காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை, அக். 4 - பொதுப்பாதைக்கான போராட் டத்தை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்கு தலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பெரியநாகலூர் ஊராட்சி க்கு உட்பட்ட காட்டுபிரிங்கியத்தை அடுத்த பாலக்கரையில் சுமார் 100 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதைக் கண்டித்தும், மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு பொதுப்பாதையை மீட்டெடுக்கவும் வெள்ளியன்று (03.10.2025) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், அவ்வூராட்சி மக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். அப்போது, அரியலூர் மாவட்ட காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்க ளையும், பொதுமக்களையும் கடு மையாகத் தாக்கி, வலுக்கட்டாய மாக கைது செய்து தனியார் மண்ட பத்தில் அடைத்துள்ளனர். காவல்து றையின் இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுப்பிரிங்கியத்தை அடுத்த பாலக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் பாலக்கரை கிரா மத்திற்கு செல்வதற்காக மூன்று தலைமுறைகளாக பொதுப்பாதை யை பயன்படுத்தி வந்தனர். இந்தப் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதால் பொது மக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்வ தற்கு பெரிதும் சிரமப்பட்டனர். எனவே, பொதுப்பாதையை மீட்டுத்தரக் கூறி, பல கட்ட போராட் டங்கள் நடத்தியதுடன், மாவட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்து புகார் மனு அளித்தனர். அதிகாரிகள் எவ்வித நட வடிக்கையும் எடுக்காத நிலை யில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதிய வர்கள் உள்பட அனைத்துத் தரப்பி னரும் கடுமையாக பாதிக்கப்பட்ட னர். போராட்டத்தையும் தடுத்து கைது செய்த அராஜகம் இந்தப் பின்னணியில், பொதுப் பாதையை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், பொதுமக்களும் இணைந்து வெள்ளிக்கிழமையன்று (அக்.3) போராட்டம் நடத்தினர். அப்போது, பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்பட 150 பேரை அரியலூர் மாவட்ட காவல்துறை யினர் தாக்கியதுடன், வலுக்கட்டா யமாக கைது செய்துள்ளனர். பொதுப்பாதையை ஆக்கிர மித்தவர்கள் கல்வீசித் தாக்கியதில் சித்ரா, ஆனந்தவள்ளி, மங்கள ராஜா ஆகியோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்கிரமிப்பாளரோடு கைகோர்த்த காவல்துறை நியாயமான கோரிக்கைகளுக் காக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை களுக்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு பதிலாக ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து காவல்துறை மேற் கொண்ட மோசமான தாக்குதல் நட வடிக்கை எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல. எனவே, பாலக்கரை பொது மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனியார் ஆக்கிரமிப்பா ளரிடமிருந்து உடனடியாக மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட வருவாய்த் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஎஸ்பி ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நியாயமான கோரிக்கைகளுக் காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்களையும், பொதுமக்களையும் இழிவாகப் பேசி, தாக்கி கைது செய்த அரியலூர் டி.எஸ்.பி. ரவிச் சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கல்வீச்சு மற்றும் போலீஸ் தாக்கியதில் காய மடைந்து சிகிச்சை பெறும் மக்க ளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், கைது செய்யப் பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டு உள்ளது.