பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 317 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
