ஆஷா தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கல்
திருத்துறைப்பூண்டி, செப். 5- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, ஆஷா தொண்டு நிறுவனம் சார்பில், அரசு பள்ளிகளில் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோமாள பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், குடை போன்ற பல்வேறு கல்வி உபகரணங்ள் ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளிக்கும் மடிகணினி வழங்கப்பட்டது. நிகழ்வில், தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். ஆஷா தொண்டு நிறுவனத்தின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ. அகிலன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பீ.பிர்ஜின் ஜோனா வாழ்த்திப் பேசிநார். ஆஷா தொண்டு நிறுவனத்தின் கணினி ஆசிரியர்கள் கீர்த்தனா, கங்கா, சங்கீதா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.