tamilnadu

மாணவர்களின் பன்முகத் திறனை ஊக்குவிக்கும் கலைப்பட்டறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

மாணவர்களின் பன்முகத் திறனை ஊக்குவிக்கும் கலைப்பட்டறை

அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக. 20 - 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கான கலைப்பட்டறையை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.  இந்த பட்டறை. மாணவர்களின் வாழ்வியல் திறன்களோடு  அவர்களின் பன்முகத்திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திறன்கள் வாயிலாக மாணவர்களின் சிந்த னைகளை செம்மையாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்து வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைப்பட்டறைக்கு அடிப்படையாக ஆகஸ்ட் 19 அன்று  நடைபெற்ற அறிமுக அமர்வில் 50 ஆசிரியர்களும் 90 மாணவர்களுமாக மொத்தம் 140 நபர்கள் பங்கேற்றனர். போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும்  அதிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கத் தேவையான வாழ்வியல் திறன்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவர் வெங்கடேஷ் மதன்குமார், டி.கார்த்திகேயன், சரவணகுமார் ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் குறித்த  பயிற்சி அளித்தனர். ஓவிய வல்லுநர்களின் உதவியுடன் மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓவி யங்கள் மற்றும் சுவரொட்டிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வாழ்வியல் திறன் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கி யுள்ளது. இக்கலைப்பட்டறையை அடிப்படையாகக் கொண்டு அனைத்து பள்ளிகளிலுள்ள போதை எதிர்ப்பு  மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்டத் திலுள்ள முதன்மை பயிற்றுநர்களுக்கும் பயிற்சி வழங்கி மாணவர்களுக்கு கலைப்பட்டறை செயல்பாடுகள் செயல் படுத்தப்படும்.