tamilnadu

img

தூத்துக்குடியிலிருந்து கலைப் பிரச்சாரப் பயணம் துவங்கியது

தூத்துக்குடியிலிருந்து  கலைப் பிரச்சாரப் பயணம் துவங்கியது

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு

தூத்துக்குடி, ஆக.16- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத் தில் நடைபெறுகிறது. இதனை முன்னி ட்டு தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து கலைப்பயணம் ஆகஸ்ட் 16 சனிக்கிழமையன்று துவங்கியது. துவக்க நிகழ்வாக சென்னை கலைக்குழுவினரின் “பட்டாங்கில் உள்ளபடி” என்ற தலைப்பில் கலை பிரச்சார நாடகம் மற்றும் ஶ்ரீவில்லி புத்தூர் புயல் கலைக்குழுவினர் பாடல், முத்து சிப்பி தாமோதரனின் பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது.   கலைப்பயணக்குழுவினருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.            இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.காசி, மாவட்ட பொருளாளர் வயணப்பெருமாள், மாவட்ட துணைச்செயலாளர் சண்முக ராஜ் மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்தி ரன், எம்.எஸ். முத்து, சங்கரன், டாக்டர் சிவனாகரன், ரவி தாகூர், ராம் குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.