tamilnadu

img

லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், ஊழியர்களை நியமனம் செய்க! மாதர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், ஊழியர்களை நியமனம் செய்க!  மாதர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 31-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க லால்குடி ஒன்றிய மாநாடு லால்குடியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் விமலாராணி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை பொருளாளர் மணிமொழி வாசித்தார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் விசாலாட்சி வாசித்தார். மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினார்.  மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்கி, சட்டக் கூலி ரூ.336-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய தலைவராக சி. விசாலாட்சி, செயலாளராக கு.செல்வி, பொருளாளராக பி.சுமதி, துணைத் தலைவராக எம்.தமிழரசி, துணைச் செயலாளராக எஸ்.விமலா ராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் 62 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் தமிழரசி நன்றி கூறினார்.