சீனாவில் முதலீடுகளை அதிகரிப்போம் : ஆப்பிள் நிறுவனம் உறுதி
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் சீனாவில் தனது நிறுவனத்தின் முதலீடுகளைத் தொடர்ந்து அதிக ரிப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகை யிலான வளர்ச்சியை அடைய ஒத்துழைப்பை மேம்படுத்துவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். சீனா மீது டிரம்ப் வர்த்தகப்போர் துவங்கிய நிலை யில் சீனாவில் இருந்த ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் உற்பத்தியை அந்நிறுவனம் தற்காலிகமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் கனமழை : பலி எண்ணிக்கை உயர்வு
மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. பசிபிக் கடலில் உருவான ‘ரேமண்ட்’ புயல் காரணமாக மெக்சிகோவின் 32 மாகாணங்களிலும் கனமழை பொ ழிந்ததில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. முதலில் 47 நபர்கள் பலியாகியுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த பேரிடரில் 59 சுகாதார நிலையங்கள், 308 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன.
குழந்தைகளின் ஏஐ பயன்பாடு : கலிபோர்னியாவில் புதுச்சட்டம்
ஏஐ சாட் பாட்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அமெரிக்கா வின் கலிபோர்னியா மாகாணத்தில் புதிய சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. ஏஐ சாட் பாட்களை குழந்தைகள் உட்பட அனைவரும் அதிகம் பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளதால் 18 வயதிற்கு உட்பட்ட சாட் பாட் பயனர்களுக்கு ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை ஓய்வு எடுக்க எச்சரிக்கை கொடுக்க வேண்டும். ‘நீங்கள் பேசுவது மனிதர்களிடம் இல்லை’ என்பதையும் நினைவுப்படுத்த வேண்டும் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
விசா விதிகளை கடுமையாக்கும் இங்கிலாந்து
இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்பதா ரர்களுக்கான விதிகளை இங்கிலாந்து அரசு கடுமையாக்கி வருகிறது. தற்போது விண்ணப்பதாரர்களின் ஆங்கிலப் புலமையை சோதிக்கும் கடினமான தேர்வு நடத்துவது தொடர்பான மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது. தடையற்ற வர்த்தகத்தின் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யபொருட்களை குவிக்கும் இங்கிலாந்து மறுபுறம் இந்தியர்களுக்கு விசா கொள்கையில் தளர்வை கொடுக்க மறுப்பதற்கு அதிருப்தி எழுந்துவருகிறது.
