திண்டிவனம் நகராட்சி ஊழியர் முனியப்பனுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சந்திப்பு
திண்டிவனம், செப்.3- திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் சாதிய வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட ஊழியர் முனியப்பனை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் முத்துக்குமரன், மாவட்டச் செயலாளரும், வழக்கறி ஞருமான எம்.கே. முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன், திண்டி வனம் ஒன்றியச் செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட தலை வர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். முனியப்பன் மீதான சாதிய வன்கொடுமைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் பி. சுகந்தி ஆகி யோர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டுள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்து கடும் நட வடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.