பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
கள்ளக்குறிச்சி, செப்.10- பட்டியலின மாணவர்கள் மீதான சாதி வெறியர்களின் தாக்குதலுக்கு துணை போகும் உளுந்தூர்பேட்டை காவல் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க் கிழமை (செப்.9) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம் பு.மாம்பாக்கம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சாதி சங்க கொடிகளுடன் குறிப்பிட்ட சாதி யைச் சேர்ந்த சாதி ஆதிக்கவெறி யர்கள் பட்டியல் சமூக மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் தலித் இளைஞர் சஞ்சய் காந்தி தலையில் பலத்த காயங் களுடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாதி க்கப்பட்டோர் மீது காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது. வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு ள்ள அநியாயத்தை கண்டித்தும், வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்ட சாதி ஆதிக்க வெறி கும்பல் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக் கோரியும், பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டியும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி உதவி, நிவாரணங்களை உடனே வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி, “விநாயகர் ஊர்வலத்தின் போது பட்டி யலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட தல்ல, இது போன்ற சாதிய அமைப்பு களுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் பின்புல மாக செயல்பட்டு சாதி சங்கங்களை தூண்டிவிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் முன்னெடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர் எனக் குற்றம்சாட்டினார். தலித் மக்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சாதிய ஆணவத்தோடு செயல்பட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அத்துமீறி பட்டி யலின மக்களின் மீது காவல்துறை எடுத்த கண்ணியமற்ற நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவ லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ. ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழு மலை, எம்.கே.பூவராகன், இ.அல மேலு, எம்.செந்தில், வி.ரகுராமன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், எ.சக்தி, டி.எஸ்.மோகன், பி.சேகர், ஏ.தேவி, கே. ஆனந்தராஜ், பி.ஸ்டாலின், வேலா. பாலகிருஷ்ணன் மற்றும் பாதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.