tamilnadu

img

பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு விரல் ரேகை பதிவு கட்டாயம் இல்லை!

சென்னை, டிச.29- பொங்கல் தொகுப்பு பெறு வதற்கு விரல் ரேகை பதிவு கட்டா யம் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சக்கரபாணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப  அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு கரும்பு மற்றும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்து இருந்தார். இந்த தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி  முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பை  கூட்ட நெரிசல் இல்லாமல் பொது மக்கள் பெற வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பு பெறு வதற்கு விரல்ரேகை பதிவு கட்டா யம் இல்லை. குடும்ப அட்டையில் உள்ள யார் வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால்,  மற்ற பொருட்கள் வாங்க விரல் ரேகை பதிவு கட்டாயம். பொங்கல் தொகுப்பு பொருட்கள்  அனைத்தும் ஜனவரி 2-ந்தேதிக்குள் அந்தந்த கடைகளுக்கு வழங்கப் பட வேண்டும் என்று விநியோக ஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. டோக்கன் கொடுப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும். நாங்கள் தற்போது பொங்கல் தொகுப்பு கொடுக்கிறோம். ஆனால் பணம் கொடுப்பது குறித்து  முதல்வர் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.