நீதிமன்றம் உத்தரவிட்டும் பணி நிரந்தரம் செய்யப்படாத அண்ணா பல்கலை. ஊழியர்கள்
முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சென்னை, அக். 22 - திமுக ஆட்சியில் 2007-ஆம் ஆண்டு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி ராப்பள்ளி ஆகிய 5 இடங்களில் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப் பட்டன. இந்த பல்கலைக்கழகங்கள் உருவானதால் அந்தந்த மாவட்ட மாணவர்கள் தொழில்நுட்ப உயர் கல்வி படிப்பில் சேர்ந்தனர். மேலும் பல பட்டதாரி கள் வேலைவாய்ப்பு பலனை அடைந்தனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் சுமார் 370 ஊழியர்கள் தற்காலிக கால முறை ஊதியம், தொகுப்பூதிய முறை மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்ற னர். சுயமாக செயல்பட்ட இந்த அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகங்கள், 2011 செப்டம்பரில் அதிமுக ஆட்சியின் போது, ‘அண்ணா பல்கலைக் கழகம் - சென்னை’யின் கீழ் இணைக்கப்பட்டன. அதன் பின்பும் சுமார் 350 பேர் தற்காலிகமாக பணி யமர்த்தப்பட்டு இன்றுவரை பணிபுரிந்து வருகின்றனர். 2012 முதல் 2022 வரை மிகக்குறைந்த ஊதி யத்தில் மேலும் எந்தவித ஊதிய உயர்வும் இல்லா மல் பணிப்பலன்கள் ஏதுமின்றி பணியாற்றி வரு கின்றனர். திமுக ஆட்சியில் 2022 முதல் ஆறு மாத கால தற்காலிக கட்டாய இடைவெளியில் (Break Period - days) சொற்ப உயர்வுடன் பணியில் தொடர அனுமதித்து வந்தனர். தற்போது இந்த தற்காலிக ஆணையானது கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி யுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஊழியர்கள், தங்களுக்கு 04.09.2025 முதல் பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படும் என எதிர் பார்த்து இருந்தனர். புல முதல்வர்கள், பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள், ‘அண்ணா பல்கலைக் கழகம் - சென்னை’ உத்தரவின்படி பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென பல மண்டல அலுவல கங்கள், உறுப்பு கல்லூரிகள், குறிப்பாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பணியாளர்களை பணியிலிருந்து எவ்வித முன்னறிவிப்பும், எழுத்துப் பூர்வமான உத்தரவுமின்றி வாய்மொழியாக நிறுத்தி விட்டனர். மேற்கண்ட ஊழியர்களுக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் 30.01.2024இல் உத்தர விட்டது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 2011-இல் பணியமர்த்தப்பட்டு இன்று வரை பல்கலைக்கழகத்தால் பயன்படுத்தப்பட்ட ஊழியர்களை, தீர்ப்பு வந்த தேதியில் இருந்து 8 வாரத்திற்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவு பிறப் பித்துள்ளார். ஆனால், 2 வருடம் ஆகியும் இந்த உத்தரவினை அமல்படுத்தவில்லை. வெளிவந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பணி நிரந்தரத்தை எதிர்பார்த்து வந்த அனைத்து ஊழியர்களுக்கும், 15 வருட காலமாக பணி யாற்றி வந்த பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப் பட்டது பேரதிர்ச்சியாக உள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் இந்த பிரச்ச னையில் தலையிட்டு அனைவரையும் பணி நிரந்த ரம் செய்து எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.