வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து புதுச்சேரியில் ஆவேச ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, ஆக. 8 - தீவிர சீர்திருத்தம் என்ற பெயரில் மக்க ளின் வாக்குரிமையை பறிக்கும் ஒன்றிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் ஜனநாயகத்தையும், தேசத்தின் இறையாண்மையையும், தேர்தல் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், அண்மைக்காலமாக ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (எஸ்ஐஆர்) என்ற பெயரில், புதிய விதிமுறைகளைக் காட்டி, கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மூத்தத் தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.ராஜாங்கம், வெ.பெருமாள், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சி யப்பன், கலியமூர்த்தி, பிரபுராஜ், சத்தியா, நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு, உழவர் கரை நகர செயலாளர் ராம்ஜி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சரவணன், ரமேஷ், இளவரசி, மதிவாணன், கலியன், சஞ்சய் உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.