tamilnadu

img

அரசு ஊழியர்களாக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், செப்.23 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மாவட்ட செயலாளர் ஜூலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச்செயலாளர் தேவி கண்டன உரையும், சிஐடியு மாவட்ட இணை செய லாளர் வி.நாகேந்திரன் வாழ்த்துரையும் வழங்க சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழி யர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து ரூ. 26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்துடன் அகவிலைப்படியும் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவி யாளர்களுக்கு ரூ.5 லட்சமும் கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.