5ஜி வசதிகள் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, ஆக. 22- அலைபேசியில் தரவுகளை சேகரிக்க அல்லல்படும் அங்கன்வாடி ஊழியர்கள் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடை முறைகளை கைவிடக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பிரேமா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கலா ஆகியோர் உரையாற்றினர். மையப் பணிகளை செய்வதற்கு 5 ஜி செல்போன், 5 ஜி சிம் கார்டு வழங்க வேண்டும், அந்தந்த கிராமத்திற்கு ஏற்றார் போல் சிம் கார்டுகளை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு வைஃபை இணைப்பு வசதி வழங்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.