tamilnadu

img

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவுடன் உடன்பாடு எட்டப்படும்!

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவுடன் உடன்பாடு எட்டப்படும்!

சிபிஎம் மாநிலச் செயலாளர்  பெ. சண்முகம் தகவல் சென்னை, மார்ச் 17 - அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் சுமூக உடன் பாடு எட்டப்படும் என்று நம்பு வதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார். திமுக - சிபிஎம் இடையே 3ஆம் கட்டமாக, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை செவ்வாயன்று (மார்ச் 17) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொரு ளாளர் டி.ஆர். பாலு தலை மையில், அக்கட்சியின் முதன் மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செய லாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே.  பன்னீர்செல்வம் ஆகியோ ரைக் கொண்ட குழுவுடன் சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் தலைமை யில் செயற்குழு உறுப்பி னர்கள் க. கனகராஜ், கே. சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன் ஆகியோர் கொண்ட குழு பேச்சு வார்த்தை நடத்தியது. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் இதன்பின் செய்தியா ளர்களிடம் பேசிய பெ. சண் முகம், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதி களில் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி னோம். இது தொடர்பாக மீண்டும் முதலமைச்சரோடு கலந்து பேசி இரவு தெரி விப்பதாக தெரிவித்துள்ள னர். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். சுமூ கமான முறையில் தொகுதி உடன்பாட்டை எட்ட இரு தரப் பிலும் முயற்சி மேற்கொள் கிறோம். அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் நிறைவு பெறும் என்று நம்புகிறோம்” என்று கூறினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மார்ச் 30 அன்று தான், வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஓரிரு நாட் களில் தொகுதி உடன்பாடு சம்பந்தமான அனைத்தும் நிறைவு பெறும் என்று கருது கிறோம். பேச்சுவார்த்தை  சுமூகமாகவே செல்கிறது தொகுதியை குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற திமுக கோரிக்கையை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதியில் போட்டியிடும் வகையில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். கூட்டணியில் அதிக கட்சி கள் உள்ளபோது உடனடி யாக பேச்சுவார்த்தை நிறைவு பெறாது. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதியை பெறுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித ஆட்சேப ணையும் இல்லை. எங்களின் பலத்திற்கு ஏற்ப கூடுதல் தொகுதியை பெற முயற்சி களை மேற்கொள்கிறோம். பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை என்ற பேச்சுக்கே இட மில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தேர்தலைப் புறக் கணிக்கக் கூடிய கட்சி அல்ல. கூடுதல்தொகுதியை ஒதுக்காவிடில் மாநிலக்குழு கூடி உரிய முடிவை எடுக்கும்” என்றார்.