tamilnadu

img

பாஜகவின் கோஷ்டி மோதலை மறைக்க கேரளா மீது அமித் ஷா வெறுப்பு பிரச்சாரம்

பாஜகவின் கோஷ்டி மோதலை மறைக்க கேரளா மீது அமித் ஷா வெறுப்பு பிரச்சாரம்

திருவனந்தபுரம் கேரள பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நிய மனத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் மற்  றும் சச்சரவை மறைக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவை அவமதித்துள்ளார்.      திருவனந்தபுரம் புத்தரிகண் டம் மைதானத்தில் பாஜகவின் வார்டு அளவிலான தலைமைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த  அமித் ஷா,”கேரளா ஊழல் மற்றும்  தேசவிரோத செயல்பாடுகளின் மையமாக மாறிவிட்டது. மத பயங்க ரவாதம் செழித்து வருகிறது. மத  தீவிரவாத சக்தியாக வளர்ந்த பாப்பு லர் ப்ரண்டை ஒன்றிய அரசு தடை செய்தது. ஆனால் கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் இன்னும் தீவிர மாக செயல்படுகிறது. கேரளாவில்  எல்டிஎப் மற்றும் யுடிஎப் அரசாங் கங்கள் ஊழல் நிறைந்தவை. காங்கி ரஸ் ஆட்சியின் போது, அவர்கள் பார் லஞ்சம், சோலார் மோசடிகள் மற்றும் பாலாரிவட்டம் பால மோச டிகளைச் செய்தனர். 2026 ஆம் ஆண்டு கேரளாவில் பாஜக ஆட்  சிக்கு வரும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் 21,000 வார்டுகளில் போட்டியிடும்” என பேசினார். கேரளாவை அவமதிக்கும்  ஏ.ஐ.வீடியோ புதிய இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கேரளா வை அவமதிக்கும் வகையிலும், மலையாளிகளை அவமதிக்கும் வகையிலும் பாஜக ஒரு செயற்கை  நுண்ணறிவு வீடியோவை உரு வாக்கியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு “வளர்ந்த கேரளா” என்ற  தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த  வீடியோ, கேரளத்திற்கு மிகவும் எதி ரானது. கேரளம் வளர்ச்சி இல்லாத  மாநிலம் என்று தோன்ற மாநிலத்  தலைவர் ராஜீவ் சந்திரசேகரின் குழு செயற்கை நுண்ணறிவு தொழில்  நுட்பத்தின் உதவியுடன் போலி  படங்களை உருவாக்க வேண்டியி ருந்தது. கேரளாவை சிலர் பல பத்தாண்டுகளாக பின்னுக்குத் தள்ளி வைத்திருப்பதாகவும், அது  வளர்ச்சி இல்லாத மாநிலம் என்றும்  அந்த வீடியோ கூறுகிறது. கேரளா வின் பெருமையாக இருக்கும் புலம்பெயர்ந்தோரையும் இது அவ மதிக்கிறது. அமித் ஷா நிகழ்சியை புறக்கணித்த சுரேஷ் கோபி அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பங்கேற்க வில்லை. அதே போல பாஜகவின்  மாநிலக் குழு அலுவலக திறப்பு விழாவிலும், பாஜக பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்  ளவில்லை. எனினும் கோட்ட யத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்  வில் கலந்து கொண்டார். கட்சி மறு சீரமைப்பு தொடர்பாக பாஜக மாநி லத் தலைவர் ராஜீவ் சந்திரசேக ரின் அதிருப்தி காரணமாக அவர் விலகி நிற்பதற்கான அறிகுறிகளை‌ இது வெளிப்படுத்தி உள்ளது.