அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு : வரவேற்புக்குழு நிறைவுக் கூட்டம்
விருதுநகர், அக்.,17- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5ஆம் மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. இந்நிலையில் வரவேற்புக்குழு நிறைவுக் கூட்டம் விருதுநகரில் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வி.குருசாமி தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் இராமசுப்புராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் துவக்கவுரையாற்றினார். முன்னாள் எஸ்.பி.ஐ மேலாளர் சந்திராராஜன், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம.மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் என்.ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஏ.மாரியப்பன் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்கனவே, பொறுப்பு வகித்த மாவட்டத் தலைவர் வி.குருசாமி மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டதால், விருதுநகர் மாவட்டச் செய லாளராக பி.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினர்களாக இராமசுப்புராஜ், கல்யாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
