tamilnadu

தஞ்சாவூரில், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

தஞ்சாவூரில், அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு 

தஞ்சாவூர், ஜூலை 28-  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க, தஞ்சாவூர் வட்ட மாநாடு, வட்டத் தலைவர் வி.ஜி. ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் சங்கக் கொடியேற்றினார். வட்ட இணைச்செயலாளர் கே. புகழேந்தி இரங்கல் தீர்மானம் வாசித்தார். வட்ட நிர்வாகிகள் ஆர். பரம தயாளன், எஸ்.சிவகடாட்சம், எஸ்.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இணைச் செயலாளர் மு.இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எஸ். கோவிந்தராஜு துவக்க உரையாற்றினார். மேனாள் அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பால்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் ஜி.பூபதி, ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி, அரசு ஊழியர் சங்க மேனாள் மாநில மகளிர் அமைப்பு நிர்வாகி ச.செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  வட்டச் செயலாளர் பி.காசிஅய்யன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். பொருளாளர் ஆர்.ஸ்ரீதர் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கு. தண்டாயுதபாணி தீர்மானங்களை முன்மொழிந்தார். வட்டத் தலைவராக வி.ஜி. இராஜாராமன், செயலாளராக பி.காசி அய்யன், பொருளாராக ஆர்.ஸ்ரீதர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி நிறைவுரையாற்றினார். வட்ட இணைச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.