இலவச வீடு வழங்கிய எய்டு இந்தியா நிறுவனம்
புதுக்கோட்டை, ஜுலை 23 - புது க்கோட்டையை அடுத்த மூக்கம்பட்டி கிராமத்தில் ஏழைக் குடும்பத்துக்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பில் இலவச வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ராஜா தலைமை வகித்தார். புதிய வீட்டை புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து, நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எய்டு இந்தியா மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பிச்சையம்மாள் நன்றி கூறினார்.