tamilnadu

img

அக்னி ஏவுகணையை ரயிலிலிருந்து ஏவும் சோதனை வெற்றி!

அக்னி ஏவுகணையை ரயிலிலிருந்து ஏவும் சோதனை வெற்றி!

புதுதில்லி, செப். 25 - அக்னி - பிரைம் ஏவு கணையை, ரயிலில் இருந்து ஏவும் இந்திய ராணுவத்தின் சோதனை வெற்றி அடைந் துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைக்கும் உள்நாட்டு அக்னி ஏவு கணைகள், கடந்த 2011 முதல் பயன்பாட்டில் உள்ளன. தொடர்ந்து அடுத்த தலை முறை ஏவுகணைகளை டிஆர்டிஓ வடிவமைத்து வருகின்றது. இந்தியாவிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை களில் அக்னி - பிரைம் மிகவும் முக்கியமானது. இந்த வகை ஏவுகணைகள் 5,000 கி.மீ. தொலைவு வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இந்த நிலையில், 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி - பிரைம் ஏவுகணையை முதல்முறை யாக பிரத்யேகமாக உரு வாக்கப்பட்ட ரயிலில் வைத்து, நேற்றிரவு ஏவி டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது. இந்த சோதனை வெற்றி யடைந்ததை தொடர்ந்து, டிஆர்டிஓ மற்றும் பாது காப்பு படையினருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள் ளார். மேலும், “இந்த வெற்றி கரமான சோதனையானது, நகரும் ரயில் ஏவுதளத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.