தஞ்சாவூர், மே 5 - தமிழகத்திலிருந்து ஆளுநரை வெளியேற்ற கூட்டணிக் கட்சித் தலை வர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என கே.பால கிருஷ்ணன் கூறினார். தஞ்சாவூரில் தியாகிகள் ஆவணப் படம் வெளியீட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழக ஆளுநர் போகிற போக்கில் உண்மைகளுக்கு மாறான பல செய்தி களை வெளியிட்டுள்ளார். சட்ட வரம்பு களுக்கு உட்பட்டுத்தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் அந்த வரம்புகளை எல்லாம் மீறி, அரசியல்வாதியைப் போன்று, ஆர்.எஸ்.எஸ். நபராகப் பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஆளுநர் உரை என்று அவர்கள் (திமுக அரசு) எழுதிக் கொடுப்பதை எல்லாம் படிக்க முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார். அமைச்சரவையின் கூட்டு முடிவின்படி எழுதப்பட்ட உரையைத் தான் ஆளுநர் படிக்க வேண்டும் என அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த உரை யை மாற்றுவதற்கோ, திருத்து வதற்கோ, படிக்க மறுப்பதற்கோ அவ ருக்கு உரிமையில்லை என சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், இதையெல்லாம் மீறி ஆளுநர், தான் சொல்வதுதான் சட்டம் என்பது போன்று பேசி வருகிறார்.
தன்னிடம் எந்தவிதமான மசோதாக் களும் நிலுவையில் இல்லை என ஆளு நர் கூறுகிறார். ஆனால், ஆளுநரிடம் 17 மசோதாக்கள் கிடப்பில், ஒப்புதல் இல்லாமல் காத்துக் கிடக்கின்றன என தமிழகத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். இந்த அரசு வேண்டுமென்றே ஆன்மீகவாதிகளைக் காயப்படுத்துகிற வகையில் செயல்படுகிறது என சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதைச் சொல்லி, கண்டிக்கிற முறையில் பேசுகிறார். சிதம்பரம் தீட்சிதர்கள் காலங்காலமாக குழந்தைத் திருமணத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தொடர் புடையவர்களைக் கைது செய்துள்ள னர். சட்டத்திற்கு விரோதமாக குழந்தைத் திருமணம் நடைபெறுவதை அரசு எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? இதற்கு முன்பாக பல முறை புகார் கொடுக்க முயன்றபோது, நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் பேசியுள்ளார். இதே போக்கில் ஆளுநர் திரும்பத் திரும்பச் செயல்படுவது முற்றிலும் சட்டவிரோதமானது. இதுதொடர்பாக விரைவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி, ஆளு நரைத் தமிழகத்திலிருந்து வெளி யேற்றுவதற்கான அடுத்த கட்ட நட வடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். ஆளுநர் இவ்வாறு பேசுவதற்கு ஒன்றிய அரசுதான் காரணம். ஆளு நரைப் பற்றி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் பல முறை புகார்கள் செய்தும், ஆளுநரை அவர்கள் கட்டுப்படுத்த மறுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.