சென்னை, மே 30- நிப்பான் நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். டோக்கியோவிலுள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான நிப்பான் பியூச்சர் கிரியே சன் ஹப் மையம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கு வதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றிணையும் இடமாகும். சமூகப் பிரச்சனை களைத் தீர்க்கும் தொழில் நுட் பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ண றிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில் நுட்பங் களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது. இந்த மையத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் விமான நிலையங்க ளில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில் நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வு தளங்கள், காத்திருப்பு நேரத்தை குறைத்தல் ஆகிய மன அழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள் வதற்கான நடை முறை வழி முறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினர்.
இந்த அதிநவீன விமான பயண முறை உலகின் பர பரப்பான விமான நிலைய மான அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர். இந்த நிறுவனம், துறை முக கண்காணிப்பு, தொழிற் சாலை மேலாண்மை, ரயில் போக்குவரத்து மேலாண்மை, தொடர்பு, சாலை போக்கு வரத்து மேலாண்மை, தீயணைப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, வங்கி ஏடிஎம் கள், டிஜிட்டல் தொலைக் காட்சி பரிமாற்றம், மின்னணு அரசாங்கம், நீர் மேலாண்மை, செயற்கைக் கோள் தகவல் தொடர்பு போன்ற கடல் முதல் விண் வெளி வரை அனைத்து நிர்வாகத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு கண்டு வருவதைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் விளக்கப்பட்டது. இந்த மையத்தை பார்வையிட்ட நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மைய உயர் அலுவலர் களுடன், தமிழ்நாட்டிற்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் நோக்கம், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திலும், பொது பயன்பாட்டு வசதிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ரூ.128 கோடியில் தொழிற்சாலை
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டா ளர் மாநாட்டில் பங்கேற்றது டன், பல்வேறு நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற் கொண்டார். அந்த வகை யில் (மே30)ஜப்பா னின் டோக்கியோவிலுள்ள முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் இந்தியாவில் முதல்முறை யாக தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவிட, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.