tamilnadu

img

நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்

நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்

 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

கடலூர், ஆக. 29- கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் நடை பெற்றது. இதில் ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்டு தங்க ளுடைய கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில இணைச் செயலாளர் கோ.மாதவன் பேசும்போது, “கடலூர் மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி யாகும் இறால் மீன் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்கள் மீது 50 விழுக்காடு வரி உயர்த்தப்பட்ட தால் மீனவர்கள், விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரி வித்தார். எனவே ஒன்றிய அரசு அவர்களைப் பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். கடலூர் மாவட்டத்தில் உரம், யூரியா தட்டுப்பாட்டை போக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேளாண் விரிவாக்க மையங்களில் உரம், யூரியா உள்ளிட்ட அனைத்து இடு பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் கோரினார். மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கடலூர் ஒன்றியம் தூக்கணாம்பாக்கம், களையூர், காரணப்பட்டு, சின்ன கங்கனாங்குப்பம், கீரப்பாளையம் ஒன்றியத்தில் பூதங்குடி, வெள்ளியங்குடி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். இதற்கு பதில் அளித்த ஆட்சியர், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய மாதவன், அரசு சான்று பெற்ற தரமான முளைப்பு திறன் உள்ள பொன்னி விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மங்களூர் ஒன்றியத்தில் 2023-24 ஆண்டில் மக்காச்சோளம் பயிருக்கு இன்சூரன்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரினார். கிள்ளை உள்ளிட்ட டெல்டா பகுதியில் பயிர் இன்சூரன்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நேரடி நெல் விதைப்பு பணி கள் நடைபெற்று வரும் நிலை யில் கீரப்பாளையம் பாசன வாய்க்கால்களில் வீராணம் ஏரி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதர் தூற்றும் இயந்திரம் வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிள்ளை சொக்கன் ஓடையில் தடுப்பணை கட்டும் பணி நடை பெற்று வருவதாகவும், விவசாய இயந்திரங்கள் கொண்டு செல்ல தடையாக உள்ள மின் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். திருத்துறை யூரில் துணை சுகாதார மையத்தை பள்ளிக்கூட இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், வேறு பகுதிக்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். இலங்கியனூர் ரயில்வே கேட் எண் 73 ஐ மூட கூடாது என மக்கள் போராட்டம் நடத்தி உள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் பேசினார். கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசும்போது தென்பெண்ணை ஆற்றில் அரசூர் பகுதியில் ஷட்டர் அமைக்க வேண்டும் என்றும், சேத்தியாதோப்பு வேளாண் விரிவாக்க மையத்தில் விதைகள் இருப்பு வைக்க வேண்டும் என்றும், அயன் குறிஞ்சிப்பாடியில் 51 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்பட்டு இதுவரையில் பாதை அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.