குடவாசலில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு
திருவாரூர், ஜூலை 17- திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகரப் பகுதியில் தீக்கதிர் ஆண்டு சந்தா பதிவு இயக்கத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் கலந்து கொண்டு குடவாசல் வர்த்தகர்கள், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் தீக்கதிர் ஆண்டு சந்தா பெறப்பட்டது. நிகழ்வில் சிபிஎம் குடவாசல் நகரச்செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.