tamilnadu

img

கரூர் மாநகரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

கரூர் மாநகரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு 

கரூர், ஜூலை 15- 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா சேர்ப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாநகரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா, மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின், மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.