tamilnadu

img

பேரறிவாளன் விடுதலை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சிபிஎம்

சென்னை,மே 18- பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீண்ட  சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த முப்பது ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணைகளை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், மே 18 அன்று  அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்திருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வது  தொடர்பாக ஒரு  தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய பிறகும், அவர் அதன் மீது எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததோடு, அத்தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததையும் தமிழக ஆளுநர் கண்டுகொள்ளவில்லை.

ஒன்றிய பாஜக அரசின் தலையில் குட்டு வைத்த தீர்ப்பு

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் பிரச்சனையென்பது குடியரசுத் தலைவரின் வரம்பிற்குள் வருகிற ஒன்றல்ல என விளக்கம் அளித்ததோடு, ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் பிரிவு 161 இன் படி முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அரசியல் சாசன சட்டப் பிரிவு 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே  அவரை விடுதலை செய்வதாக அறிவித்திருக்கிறது. மேலும், மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் முடிவுகளை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.  நீண்ட காலமாக இப்பிரச்சனையை ஒருவித உள்நோக்கத்தோடு இழுத்தடித்த ஆளுநருக்கும், பாஜக ஒன்றிய அரசுக்கும் தலையில் வைக்கப்பட்ட குட்டாகவும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது.

நீண்ட காலமாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு என்பது பேரறிவாளனுக்கும், அவரது தாயாரான அற்புதம்மாள் அவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக களத்தில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றியாகும். மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த தமிழக அரசின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும், அவரது  தாயாருக்கும், அவர்களுக்கு ஆதரவாக சட்டப்போராட்டத்தில் துணை நின்ற தமிழக அரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான முடிவையும் தமிழக அரசு எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

புதுதில்லி, மே 18 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனு பவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது. ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்வதற்கு அதி காரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை தாங்கள் விடுதலை செய்வதாக நீதிபதிகள் எல்.  நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு அரிதான தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், தன்னை  விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில், ஒன்றிய அரசு சார்பில் கூடுதல்  சொலிசிட்டர் ஜெனரல் நடராஜனும், தமிழ்நாடு அரசு  சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதியும் ஆஜராகி வாதாடி வந்தனர்.  “பேரறிவாளனின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, ஏற்கெனவே அவருக்கு ஒரு நீதிச் சலுகை வழங்கப்பட்டு விட்ட தால், மீண்டும் அவரின் தண்டனையை குறைக்கக் கூடாது” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன் வாதிட்டு வந்தார். 

“ராஜீவ் காந்தி கொலை வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கு என்ற அடிப்படையில், சட்ட விதி 432 (7)-ன் கீழ்  இதில் குடியரசுத் தலைவருக்கே முடிவு எடுக்கும் அதி காரம் உள்ளது. மாநில அரசுக்கோ, ஆளுநருக்கோ முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. ஸ்ரீஹரன் வழக்கே இதற்கு உதாரணம். மாநில அரசின் விசார ணை ஆணையம் விசாரித்த வழக்கு என்றால் மட்டுமே, அதில் மாநில அரசு முடிவு எடுக்க  முடியும். அதனால்தான், தமிழ்நாடு ஆளுந ரும், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தை குடி யரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்ட னை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவ காரத்தில், சட்டவிதிகளை மீறி அமைச்சரவையின் முடிவு இருந்தால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஏற்கெனவே தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றுவிட்டதால், சட்டப்பிரிவு 432-இன் படி தற்போது குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்க முடியும். ஆளுநரை இதில் முடிவு எடுக்கும்படி இனிமேல் கூற முடியாது. அதுமட்டுமன்றி, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், இந்திய சட்டப் பிரிவு, ஆயுதப் பிரிவு, வெளி நாட்டுச் சட்டப் பிரிவு, தடா சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் விசாரணை நடப்பதால், இவ்வழக்கில் தொடர்புடை யவரை விடுதலை செய்யும் அதிகாரம் 72-வது அரசியல் சாசனத்தின்படி ஒன்றிய அரசுக்கே உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த இருக்கிறது. முதலில் இருந்து ஆதாரங்களை திரட்டி விசாரிக்க உள்ளது. எனவே, பேரறி வாளனை விடுவிக்கக் கூடாது” என்றும்  நடராஜன் வாதங்களை எடுத்து வைத்திருந்தார்.

ஆனால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன் வைத்த வாதத்தை,  தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் ராகேஷ் திவேதி கடுமை யாக மறுத்தார். “சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற  கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு கிடையாது. அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.  மாறாக, ஒன்றிய அரசு இந்த விவகா ரத்தில் தனக்கே அதிகாரம் இருப்பதாக கூறுகிறது. அதுவே இந்த வழக்கில் குழப்பங்களுக்கு காரணம். 

யாரை விடுவிக்கக் கூடாது என்று முடிவெடுக்க மாநில அமைச்சரவை க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுநர் தனது தனித்த விருப்பங்களை செயல்படுத்த முடியாது. ஆளுநர் விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி செயல்பட வேண்டும். ஆளுநர் அந்த  கடமையை செய்யவில்லை. அவர்  தன்னை மட்டுமின்றி இந்த விவ காரத்திற்கு உள்ளே குடியரசுத் தலை வரையும் கொண்டு வந்துள்ளார். அர சியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழை யை ஆளுநர் செய்துவிட்டார். குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டுவர முடியாது. அது ஆளு நருக்கு இருக்கும் அதிகாரம். அதில்  அவர்தான் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டு முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போடக் கூடாது. இதற்கு ஆளு நருக்கு அதிகாரமே இல்லை. அமைச்ச ரவை தீர்மானத்தை ஆளுநர் குடி யரசுத் தலைவருக்கு அனுப்ப முடி யாது. ஆனால், இந்த விடுதலை தீர்மானத்தை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

மேலும், கருணை மனு மீது முடி வெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத் தான் உள்ளது என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. காந்தி  படுகொலை வழக்கில் ஆயுள் தண்ட னை பெற்ற கோட்சே சகோதரர் கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். அரசும் அவரை விடு தலை செய்தது. அவரைப் போல் அல்லாமல் பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இந்த அதிகாரம் மாநில அரசுக்கு கீழ்  வருகிறது. மாநில அரசு இதில் முடிவு எடுக்க முடியும். இதனால் மாநில அரசு  நினைத்தால் ஏனைய ஆயுள் தண்ட னை கைதிகளைப் போல இந்த வழக்கி லும் மன்னிப்பு வழங்க முடியும்” என்று ராகேஷ் திவேதி குறிப்பிட்டிருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “32 வருட மாக பேரறிவாளன் சிறையில் இருக்கும்  நிலையில், இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க முடி யாது. இந்த விவகாரம் மாநில அரசு தொடர்பானது. அதனால் மாநில அரசுக்கே இதில் முடிவு எடுக்கும் அதி காரம் உள்ளது. ஆளுநர் தனக்கு வழங்கப் பட்டு இருக்கும் சுதந்திரத்தை வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது சரியல்ல!” என்று  குறிப்பிட்டிருந்தனர்.

“மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் எப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்? என்று கேள்வி எழுப்பியதுடன், “பேரறி வாளன் ஆயுள் தண்டனை கைதி என்ப தால் அவரின் விடுதலையில் ஆளு நர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி யது தவறு. இந்திய கூட்டாட்சி தத்து வத்திற்கே இது எதிரானது” என்றும் விமர்சித்தனர். அத்துடன், “பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கித் தவிக்க வேண்டும். அவரை  நாங்களே ஏன் விடுதலை செய்யக் கூடாது?” என்றும் கேள்வி எழுப்பி யிருந்தனர்.

அமைச்சரவை முடிவு எடுத்த பின்  ஆளுநர் அந்த விவகாரத்தை ஏற்க  வேண்டும். ஆளுநர் அமைச்சரவை யின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியது தானே. அதை விடுத்து குடியரசுத் தலை வருக்கு பரிந்துரையை மேற்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா? இதைப் பற்றி முதலில் ஒன்றிய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கூறிய அவர்கள், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமேதான் இருக்கிறது என்றால், 161 சிஆர்பிசி (CrPC) சட்டப் பிரி வின் படி, மாநில ஆளுநர்கள் இது வரை வழங்கிய மன்னிப்பெல்லாம் சட்ட விரோதமா? 70-75 வருடங்களாக ஆளு நர்கள் அளித்த விடுதலை எல்லாம் விதிமீறலா? அல்லது ஆளுநருக்கான அந்த அதிகாரம் நீக்கப்பட்டு விட்டதா? என்றும் கேட்டனர்.

இது ஒருபுறமிருக்க, அத்துடன் மாநில அமைச்சரவையின் தீர்மா னத்தின்மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதையும் நாங்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது. உண்மையில், அமைச்சரவை முடிவு  எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடி வெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், பேரறிவாளன் வழக்கில் 28 மாதங்கள் முடிவெடுக்கா மல் இருந்துவிட்டு, இப்போது குடி யரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி விட்டார் என்றால், ஆளுநர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இப்படி செய்தார்? எந்த சட்டப்பிரிவுகளின்கீழ் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருப்பதாக அவர் கருதினார்? அந்த சட்டப்பிரிவுகளை கடிதத்தில் ஏன் அவர் குறிப்பிடவில்லை? என்று அடுக் கடுக்கான கேள்விகளையும் எழுப்பினர்.

மேலும், குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ யாராக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படக் கூடாது. ஒன்றிய அர சுக்கு இதில் வாதம் வைக்க எதுவும்  இல்லை என்றால், நாங்கள் இப்போதே  பேரறிவாளனை விடுதலை செய்து விடு வோம். நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவு எடுப்போம். குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம் என்றும் கடந்த மே 4 அன்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியிலேயே, பேரறி வாளன் வழக்கு, புதனன்று காலை காலை 10.45 மணியளவில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பேரறிவாளன் விடு தலை விஷயத்தில், முழுமையாக ஆராய்ந்த பிறகே தமிழக அமைச்சர வை தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளது. ஆனால், அதில் ஆளுநர் முடி வெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டப்படி தவறு.  பேரறிவாளன் விடுதலை விவ காரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப  விருப்பமில்லை. 161-வது பிரிவில்  முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தி யதால், அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு  142-ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்கிறது” என்று அதிரடியான தீர்ப்பை வழங்கினர்.

;