tamilnadu

img

குழந்தைகள் இல்லத்தில் முதல்வர் ஆய்வு: பணியில் இல்லாத ஆசிரியர் மீது நடவடிக்கை

ராணிப்பேட்டை, ஜூன் 30- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், ராணிப்பேட்டை மாவட்டம் காரைக்கூட்டுச் சாலையிலுள்ற சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வின்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலு வலர் மீது விளக்கம்கோரி நடவடிக்கை  எடுக்க உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி யரக வளாகத்தினை முதலமைச்சர் வியாழனன்று (ஜூன் 30)திறந்து  வைத்தார். அதன்பிறகு, ராணிப் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புதிய திட்டப்  பணிகளுக்கு அடிக்கல் நாட்டு அரசு  விழாவுக்கு செல்லும் வழியில், காரைக் கூட்டுச் சாலையில் உள்ள சிறுவர்களுக் கான அரசினர் குழந்தைகள் இல்லத் திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண் டும் என்றும் அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர்க ளிடம் கேட்டுக் கொண்டார். அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வின்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

;