மாணவர் சேர்க்கையில் சாதனை
தஞ்சாவூர், ஆக.2 - தஞ்சை மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின், நிகழ் கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 50-ஐ நிறைவு செய்து சாதனை படைத்து உள்ளது. சாதனைக்கு வித் திட்ட பள்ளியின் ஆசிரியர் காஜா முகைதீன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நித்யா, துணைத் தலைவர் ஷீலா ராணி, உறுப்பினர் ரிஸ்பால் ஆகியோருக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலை வர் கௌதமன், இப்பள்ளி யில் வெள்ளிக்கிழமை தலைமை ஆசிரியராக பணியேற்று இருக்கும் வீர.சந்திரசேகரன் மற்றும் இடைநிலை ஆசிரியர் கமலி ஸ்ரீ ஆகியோரும் பொன்னாடை அணி வித்து வாழ்த்து தெரி வித்தனர்.
ஆக.6-இல் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஆக.2 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலு வலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 6.8.2025 (புதன்கிழமை) அன்று காலை 10 மணியளவில், சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதியப் பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோ சனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரி யங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
அரியலூர், ஆக.2 - அரியலூர் மாவடடம் செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (71). வீர னார் கோயில் பூசாரி யான இவருக்கும், அதே கிராமம், குள்ளன் காலனித் தெருவைச் சேர்ந்த பெருமாள் (57) என்பவருக்கும் முன்விரோ தம் இருந்து வந்துள்ளது. கடந்த 28.7.2019 அன்று ராஜேந்திரனை, பெருமாள் தகாத வார்த் தையால் திட்டி, கத்தி யால் குத்தியுள்ளார். அதனை தடுக்க வந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்(24) வயிற்றிலும் அவர் கத்தியால் குத்தி யுள்ளார். இதில் உயி ருக்கு ஆபத்தான நிலை யில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட் டார். இதுகுறித்து சிகிச் சையில் இருந்த தினே ஷிடம் தளவாய் காவல் துறையினர் பெற்ற வாக்கு மூலத்தை கொண்டு பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்து, அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணி மேகலை, ராஜேந்திரனை கத்தியால் குத்திய மைக்கு 10 ஆண்டுகள், தினேஷை கத்தியால் குத்தியமைக்கு 10 ஆண்டுகள் என 20 ஆண்டு கள் சிறை தண்டனையும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதை யடுத்து குற்றவாளி பெரு மாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 பேர் கைது
தஞ்சாவூர், ஆக.2 - தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு தவணை நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினர் வெள்ளிக் கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் காவேரி நகரில் பி.எம்.அசோசியேட் என்ற நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் (44), தஞ்சாவூர்-புதுக் கோட்டை சாலை ரோஸ்லின் நகரைச் சேர்ந்த காயத்ரி (34) நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் தீபாவளி, பொங்கல் மற்றும் சிறு சேமிப்பு திட்டத்தின் முலம் ரூ.1,000, ரூ.500 போன்று மாத தவணையாக 12 மாதம் செலுத்தினால் கூடுதல் போனஸ் மற்றும் பட்டாசு தருவதாக இருவரும் கூறினர். இதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். இவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி தவணைக் காலம் முடிந்தும் பணத்தைத் திருப்பித் தராததால் தொடர்பு டைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சசிரேகா உள்ளிட்ட 10 பேர், தங்கள் மூலமாக 380 பேர் சுமார் ரூ.35 லட்சம் முதலீடு செய்ததாகவும், பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாகவும் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாள ரிடம் புகார் செய்தனர். இதன் பேரில் தஞ்சாவூர் மாவட்டக் குற்றப் பிரிவில் வழக்குப் பதிந்து பிரபாகரன், காயத்ரியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஆக.2 - தஞ்சாவூர் விற்பனைக் குழுவின்கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1388 விவசாயிகள் 210 மெட்ரிக் டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநி லத்தைச் சேர்ந்த வணி கர்கள், கும்பகோணம், செம்ப னார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்திக்கு அதிக பட்சம் ரூ.7689, குறைந்தபட்சம் ரூ.7299, சராசரி ரூ.7561 என விலை நிர்ணயித்தனர்.
செங்கமங்கலம் அரசுப் பள்ளியில் மென் திறன் பயிற்சி
தஞ்சாவூர், ஆக.2 - தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் இப்பயிற்சி வழங்கப்பட்டது. தன்னை அறிதல், நேர மேலாண்மை, இடம் அறிதல், நோக்கங்களை அறிந்து கொள்ளுதல், இலக்கை தீர்மானித்தல், தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ளுதல், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுதல், வாய்ப்பு அறிக்கை தயாரித்து முயற்சி செய்தல், முயற்சியை தொடர்ந்து செய்தல், தொடர் பயிற்சி பழக்கமாவதை அறிந்து கொள்ளுதல் போன்ற தலைப்பு களில் பயிற்சியாளர் இளங்கோ முத்து பயிற்சி வழங்கினார். பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் சிலம்பரசன் நிகழ்வை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன், பள்ளி களில் அறக்கட்டளை செயல்பாடுகளை விளக்கி, பயிற்சியின் நோக்கங்களை எடுத்துரைத்தார். மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.