கியூபாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 20 கோடி மருந்துகளைத் தயாரிப்பதற்கு நிதியுதவி கிடைத்துள் ளது. பொருளாதார ஒருங்கிணைப்புக்கான மத்திய அமெ ரிக்க வங்கி 4 கோடியே 67 லட்சம் யூரோக்களை கியூபா வுக்கு வழங்குகிறது. கியூபாவின் கொரோனா தடுப்பூசி களுக்கு முதன்முறையாக வெளியிலிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பதோடு, அது தொடர்பான ஆய்வுகளை மேம்படுத்த இந்த நிதி உதவும் என்று கியூபா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் தனது ராணுவமயப் படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் தலைமையி லான நேட்டோவை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ரஷ்ய மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட் டத்தில் நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தையின்போதே இதைத் தெரிவித்ததாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியுள்ளார்.
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை சீனா பெருமளவு அதிக ரித்துள்ளது. ஈரானிடமிருந்து ஏற்றுமதி ஆகும் எண் ணெய்யின் அளவு பூஜ்யத்தைத் தொட வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா தடைகளை விதித்தது. ஆனால், சீனாவின் வளர்ச்சி மற்றும் அதன் கச்சா எண்ணெய் தேவை அமெரிக்காவின் தடைகளை உடைத்துள்ளது. வரும் ஆண்டில் ஈரான் மற்றும் வெனி சுலாவிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.