tamilnadu

img

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுக!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுக!

சிஐடியு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 5 - பொதுத் துறை நிறுவனமான அரசுப்  போக்குவரத்துக் கழகங்களை தனி யார்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐ டியு) வலியுறுத்தி உள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) புதுக்கோட்டை மண்ட லத்தின் 16 ஆவது ஆண்டு பேரவை சனிக் கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. பேரவைக்கு மண்டலத் தலை வர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். பேரவையைத் தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார். மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், பொருளாளர் எம்.முத்துக்குமார் அறிக் கைகளை முன்வைத்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் க.முக மதலிஜின்னா, கும்பகோணம் மண்டலச்  செயலாளர் ஜி.மணிமாறன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்  பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை  சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து சம்மேளன  பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயி னார் நிறைவுரையாற்றினார்.  மண்டலத் தலைவராக கே.கார்த்தி கேயன், பொதுச் செயலாளராக இரா. மணிமாறன், பொருளாளராக எம். முத்துக்குமார், துணை பொதுச் செய லாளர்களாக எஸ்.சாமிஅய்யா, எஸ். செந்தில்நாதன், துணைத் தலைவர் களாக ஏ.ஸ்ரீதர், எஸ்.பாலசுப்பிர மணியன், எஸ்.பாலமுருகன், எஸ். செந்தில்குமார், உதவிச் செயலாளர் களாக வி.ஆனந்தன், கே.சபாபதி, பி. கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில் குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக பி.செந்தில்நாதன் வர வேற்றார். ஆர்.சீனிவாசன் கொடி யேற்றினார். எஸ்.செந்தில்குமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.  வி.ஆனந்தன் நன்றி கூறினார். பொதுத்துறை நிறுவனமான அரசுப்  போக்குவரத்துக் கழகங்களை தனி யார்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற  தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய  பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட தொழிலாளர்களுக்கு விரோதமான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும். சுழற்சிமுறை பணியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.