tamilnadu

img

ஒரு சொல் - ப.முருகன்

ஒரு சொல் உனைப் போற்றும்
ஒரு சொல் உனைத் தூற்றும்
ஒரு சொல் உனை மாற்றும்
ஒரு சொல் உனைஏற்றும்
ஒரு சொல் உனைத் தேற்றும்
ஒரு சொல் உனை வெல்லும்,
ஒரு சொல், உனைக் கொல்லும்
அது நாவினால் வீசுபவரின்
நடத்தை பொறுத்தது.

அது அன்பாக இருக்கலாம்
வம்பாகவும் இருக்கலாம்
நல்லதாகவும் இருக்கலாம்
அல்லதாகவும் இருக்கலாம்
நஞ்சாகவும் இருக்கலாம்
மருந்தாகவும் இருக்கலாம்
அது உனை காயப்படுத்தலாம்,
களங்கப்படுத்தலாம்
வாழ்க்கையெல்லாம்
மாளச் செய்யலாம்
ஆளச் செய்யலாம்
அடிமை செய்யலாம்
தணியச் செய்யலாம்
பணியச் செய்யலாம்
அணியச் செய்யலாம்
அவிழ்க்கச் செய்யலாம்.

அது விஷ அம்பாக இருக்கலாம்
நிஜ அன்பாகவும் இருக்கலாம்
உண்மையாய்இருக்கலாம்
உனக்கு கன்னமாய் இருக்கலாம்
அது இன்பமாய் இருக்கலாம்
துன்பமாய் இருக்கலாம்
மேலே எழச் செய்யலாம்
கீழே விழச்செய்யலாம்
அது அச் சொல்லை 
வீசும் வேகத்தாலும்
வீசுபவரின் தகிப்பினாலும் 
உணரப்படலாம் உணர்த்தப்படலாம்.

அது எதுவாயினும் எதிர்கொள்ளும் 
துணிவும் வலிவும்
பொறுமையும் உள்ள உறுதியும்
திறந்த மனதும், திறமான கையாளலும் 
உனை கரை சேர்க்கும்
காப்பாற்றும்
வளம் சேர்க்கும்
வாழ்விக்கும்
உயிர்காக்கும், 
ஒளிரச்செய்யும்
உய்விக்கும்
உன்னதராக்கும். 

ஆறா ரணமாக்கும் 
மாறா வடுவாக்கும
தேராச் சொல்லால்
நீராதுன்பம் மிகும்
நீராய்க் குளிர்விக்கும்
நேயம் மிகு சொல்லால்
நிறைந்த இன்பம் வரும்.