100 நாள் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்தால் வேலை மறுப்பு
ராணிப்பேட்டை, செப். 14 - 100 நாள் அட்டை வைத்துள்ள அனை வருக்கும் பணி வழங்க கோரி கடந்த செப். 4 அன்று மாநில முழுவதும் விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், மருதாளம் பகுதியில் 100 நாள் ஏரி வேலை செய்யும் பெண் தொழி லாளர்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 நாள் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு சங்கத்தில் சேர்ந்தால் வேலை அளிக்க முடியாது என்று பணி பொறுப்பாளர் அலமேலு தெரிவித்தார். மேலும் அடிக்கடி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் செல்கிறீர்கள் அவரிடம் சென்று 100 நாள் அடையாளஅட்டை அளித்து வேலை செய்து கொள்ளுங்கள் என கூறியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ‘உங்களுக்கு வேலை வேண்டுமென்றால் உங்கள் ஊரில் எங்கு புறம்போக்கு நிலம் உள்ளது என்பதை காட்டுங்கள் அங்கு சென்று நீங்கள் வேலை செய்யலாம்’ என தெரிவித்துள்ளார். இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மருதாலம் பிடிசி பிரகாஷ், தலைவர் ராதாகிருஷ்ணனிடம் விதொச மாவட்ட குழு உறுப்பினர் வ. வேலு, லோகநாதன் நேரில் பேசியுள்ளனர். மேலும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிகண்டன் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்து பேசியுள்ளார்.
