tamilnadu

img

சிறு பொறி காட்டுத் தீயாக மாறும்

சிறு பொறி காட்டுத் தீயாக மாறும்

கிரீஸ் இளம் கம்யூனிஸ்ட்கள் கலாச்சார   திருவிழாவில் போராட்ட அறைகூவல்

கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் அவர்களது பத்திரிகை ஓடிஜிடிஸ் (Odigitis)  இணைந்து 51 ஆவது கலாச்சார மற்றும் அரசியல் திருவிழா நடத்தின. இதில் அந்நாட்டு அரசின் தொழிலாளர் விரோத மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.  இந்த போராட்ட அறைகூவலுக்கு “சிறு பொறி காட்டுத் தீயாக மாறும்” என்ற முழக்கத்தையும் வெளியிட்டுள்ளது. கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு ஆண்டு தோறும் கலாச்சார மற்றும் அரசியல் திருவிழா நடத்தி வருகிறது. “உலக நாடுகளின் பாட்டாளிகளே, ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கத்தின் கீழ் நடைபெறும் இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு பிரதிநிதிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றன.  ஏகாதிபத்திய எதிர்ப்பு  இடதுசாரிகள் சந்திப்பு  அவர்கள் தங்கள் நாடுகளில் நடத்தும் ஏகாதிபத்திய போராட்டங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச அளவில் ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு போ ராட்டத்தை ஒருங்கிணைக்கவும் இந்த நிகழ்வில் விவாதம் நடத்துகிறார்கள். இவ்வாறு இந்தத் திருவிழாவை சர்வதேச இடதுசாரி களின் சந்திப்பு மையமாக கிரீஸ் நாட்டின் இளம் கம்யூனிஸ்ட்கள் நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு நிகழ்வில் உக்ரைன், ரஷ்யா, பாலஸ்தீனம், இஸ்ரேல், துருக்கி, சைப்ரஸ் நாடுகள் என உலகம் முழுவதும் இருந்து 35-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் இளைஞர் அமைப்புகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளின் நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  கியூபா மற்றும் பாலஸ்தீனத்தின் தூதர்கள், சர்வதேச தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கலை இலக்கியத்துறையில் கம்யூனிசத் தத்துவத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை யும் முன்னிறுத்தும் ஆளுமைகள் உள்ளிட்டோரும் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.   7 மணி நேர வேலை இந்நிகழ்வில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கூட்சூம்பாஸ் (Dimitris Koutsoumbas) பேசுகையில், கிரீஸ் அரசு வேலை நேரத்தை 13 மணி நேரமாக மாற்ற முன்னெ டுத்துள்ள தொழிலாளர் விரோத மசோதாவைக் கடுமையா கக் கண்டித்தார். மேலும் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றும் திட்டத்திற்கு இடமே இல்லை. இந்த 21 ஆம் நூற்றாண்டில் நாளொன்றுக்கு 7 மணி நேரமும், வாரத்திற்கு 5 நாள் என 35 மணி நேர வேலை நேரம் போதுமானது. ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தங்களுடன் கூடிய வேலை நடைமுறையே சரியானது என்றும் அறிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் அரசுடன் கைகோர்க்கும் கிரீஸ் அரசின் கொள்கை களை மிகக் கடுமையாக விமர்சித்தார். 1967 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின் படி உடனடியாக கிழக்கு ஜெருசலே மைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அக்.1 பொது வேலை நிறுத்தம்  மேலும் இந்த திருவிழாவின் நோக்கமானது வெறும் கொண்டாட்டம் அல்ல. இது போராட்டத்திற்கான அணி திரட்டல் நடவடிக்கை. அந்த மேடையின் மூலம் அக்டோபர் 1 அன்று கிரீஸ் அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக ளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். கூட்டுப் போராட்டமே ஒரே வழி என அந்நாட்டு மக்களுக்கு போராட்ட அழைப்பும் விடுத்துள்ளார்.