tamilnadu

img

நல வாரியத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும்

நல வாரியத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும்

தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 16- தையல் தொழிலாளர் நல வாரியத்திற்கு தனி நிதியம் உருவாக்க வலியுறுத்தி, தையல் தொழிலாளர்கள் செவ்வாயன்று (செப்.16) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டனர். தையல் தொழிலாளர்களுக்கு மாநில அளவில் முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும், கட்டுமான நல வாரியத் தொழி லாளர்களுக்கு வழங்கும் கல்விக் கடன் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் தையல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்; நல வாரியத்தில் பதிவு செய்து உள்ள தொழிலாளர்களுக்கு தையல் இயந்தி ரம் வழங்க வேண்டும், ஓய்வூதியத் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த  வேண்டும், இலவச மின்சாரம் வழங்க  வேண்டும்; கூட்டுறவு தையல் உறுப்பினர் களுக்கு அடையாள அட்டை, தீபாவளி போனஸ், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,  கார்மெண்ட்ஸ் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் வட சென்னை மாவட்டத்  தலைவர் பி. கோவிந்தசாமி தலைமை தாங்கி னார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்  எம். ஆனந்தன் வரவேற்றார். சிஐடியு தென்  சென்னை மாவட்டத் தலைவர் ஏ. முருகா னந்தம், மத்திய சென்னை மாவட்ட துணைத்  தலைவர் எம்.வி. கிருஷ்ணன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஜி.குணசேகர், ஜி.  ஜெயராமன், பொருளாளர்கள் ஆர். மணி மேகலை, ஏ.எஸ். பாமிதா உள்ளிட்டோர் பேசி னர். தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மே ளன மாநிலத் தலைவர் பி.சுந்தரம் சிறப்பு ரையாற்றினார். ஆர்ப்பாட்ட முடிவில், ஆட்சியர் ரஷ்மி  சித்தார்த் ஜகடேவிடம் மனு அளிக்கப்பட்டது.