உறையா அறிவாம் திருக்குறளுக்கு கவிதையால் ஓர் உரை!
கவிஞர் வைரமுத்து தன்னுடைய ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் திருவள்ளுவரைப் பற்றி பேசும் போது, ‘வள்ளுவர் முதற்றே அறிவு’ என்று முன்மொழிந்திருப்பார். மேலும், திருக்குறள் ஒரு ‘அனாதை அறிவு’ என்று சொல்லிச் சென்ற மதபீடங்கள் திருக்குறளை ஒருபோதும் தாங்கிப் பிடித்ததில்லை. அரச அதிகார பீடங்களும் திருக்குறளை தாங்கி நின்றதில்லை. ஆயினும், திருக்குறள் காலம் கடந்து நிற்கிறது என்பார்.
பனை ஓலையில் புள்ளி வைக்காத தமிழ் எழுத்துக் களால் எழுதப்பட்ட திருக்குறள் காலக் கரை யானின் கோரப் பற்களுக்கு இரையாகாமல், இன்றள வும் நிலைத்து நிற்கிறது என்றால், அந்நூல் பேசிய அறமே திருக்குறளை அரணாக பாதுகாத்து வந்துள்ளது. புராணத்தில் கூறப்படும் புனைகதையில் வரும் வாமன அவதாரத்துக்குகூட உலகை அளக்க இரண்டு அடி தேவைப்பட்டது. ஆனால், வள்ளுவப் பேராசான் ஒன்றே முக்கால் அடியில் உலகினை அளந்து விட்டார். திருக்குறளுக்கு பழைய பதின்மர் உரையன்றி, இந்த மதிப்புரை எழுதப்படும் நேரத்திலும்கூட யாரே னும் ஒருவர் திருக்குறளுக்கு உரை எழுதிக் கொண்டி ருக்கக் கூடும். திருவள்ளுவரே உறைந்து போகும் அள வுக்கு உரை எழுதிய பெருமக்கள் உண்டு. பரவலாகப் பேசப்படும் பரிமேலழகர் உரை வ.உ.சிதம்பரனாருக்கு உவப்பானதாக இல்லை. அவர், சிறையிலிருந்தவாறே மூல நூலுக்கு மிக நெருக்கமாக இருந்த மணக்குட வர் உரையை முதன் முதலாக பதிப்பித்து வெளி யிட்டார். அத்துடன், திருக்குறளுக்கு அவரும் ஒரு உரை எழுதியுள்ளார். ஆனால் அது முழுமை பெறவில்லை. வள்ளுவரின் காலம் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டது என்பதில் பெரும்பாலும் ஒத்த கருத்து வந்துள்ளது. ஆனால், ஒரு சிலர் வள்ளுவரின் காலத்தை அதை விடவும் முன்னோக்கி நகர்த்த முயல்கின்றனர். அதற்கான தரவுகளையும் முன் வைக்கின்றனர். வள்ளுவத் தேரை பின்னோக்கி இழுத்துச் சென்று பெருமை தேடுவதைவிட முன் னோக்கி இழுத்து வருவதே காலத்தின் தேவை யாக உள்ளது. இயற்கை நுண்ணறிவினால் செதுக்கப் பட்ட திருக்குறள், செயற்கை நுண்ணறிவு காலத்தி லும் செல்லத்தக்கதாக இருக்கிறது. இன்றைய தலை முறையும் திருக்குறளை புரிந்து கொள்ளத்தக்க வகை யில் பல உரையாசிரியர்கள் தங்களது உரையால் புதுப்பித்து தந்துள்ளனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தன்னு டைய உரையால் குறள் எனும் தங்கத்தை வைரத்தா லும், முத்தாலும் இழைத்து, புதியதொரு ஆபர ணத்தைச் செய்திருக்கிறார். 12 வயதில் காத லிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரை எழுதி யிருக்கிறேன் என்று முன்னுரையில் குறிப்பிடும் அவர், இளைஞர்களுக்காக இலகு மொழியில் உரையை நெய்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். நிலையாமை குறித்து நிலைத்த நூல்கள் நிறைய உண்டு. ஆனால், திருவள்ளுவர் ‘நேற்றைக்கு இருந்த வர் இன்று இல்லை என்பதுதான் இப்பூவுலகின் சிறப்பு’ என்று, இறப்பையே சிறப்பாக்கி இயல்பாகக் கடந்து விடுவார். குறுகிய வடிவில் கூறப்பட்ட குறளின் ஆயுட்காலம் அழிவில்லாமல் நீடித்துக் கொண்டே வந்துள்ளது, யாருடைய கருணையாலும் அல்ல; குறளின் பொருண்மையால் மட்டுமே ஆகும். வைரமுத்து எழுதியுள்ள உரையில் முதல் அதி காரத்திலேயே கலகம் துவங்கி விடுகிறது. ‘கடவுள் வாழ்த்து’ என்று காலம் காலமாய் சொல்லப்பட்டி ருந்ததை ‘அறிவு வணக்கம்’ என்று இவர் அர்த்தப் படுத்துகிறார். இதைச் சுட்டிக்காட்டி, ‘இப்படி மாற்ற அதிகாரம் உண்டா?’ என்று வினா எழுப்பினார் நண்பர் ஒருவர். வள்ளுவர் திருக்குறளை எழுதும் போது இவர்தான் பனை ஓலையை வெட்டிக் கொடுத்தவர் போலவும், எழுத்தாணியை அவ்வப்போது கூராக்கித் தந்தவர் போலவும் கருதிக் கொள்பவர் அவர். கடவுள் வாழ்த்தை அறிவு வணக்கமாக மாற்றுவது பிழை என்ப வர்கள், ‘அறிவொன்றே தெய்வம்’ என்று மகாகவி பாரதி அறிவித்திருப்பதை அறிகிலர் போலும். ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்’ - எனும் குறளில் வரும் ‘அறுதொழில்’ எவை என்ற கேள்வி எழுகிறது. பரிமேலழகர் அறுதொழிலை, மன்னரும் மன்னர் சார்ந்தும் அந்தணரும் அந்த ணர் சார்ந்துமாய் அர்த்தப்படுத்துகிறார். ஆனால், கவிஞர் வைரமுத்து வாழ்க்கையைச் சாறு பிழிந்து இதற்கு உரை எழுதுகிறார். உழவு, தொழில், வாணி கம், கல்வி, தச்சு, வரைவு என்று பொருள் கொள்வது அறிவுக்கு அருகில் இருக்கும் என்கிறார். ‘மயிர் நீப்பின்’ குறளில் வரும் உயிரியை ‘கவரி மான்’ என்று பொருள் கொண்டு, ஒரு மயிர் நீங்கி னாலும் கவரிமான் உயிரை மாய்த்துக் கொள்ளும் என்று வழமையாக பொருள் கொண்டனர். ஆனால், இவர் கவரிமா வன்னார் என்று பிரித்துப் பொருள் கொண்டால், பனிக் காடுகளில் வாழும் கம்பளி முடி கொண்ட எருது என்று பொருள் கொள்வதே பொருத்தம் என்கிறார். இந்த விளக்கத்தால் ஏற்றி வைக்கப்பட்ட பொருளின் சுமை தாங்காமல் களைத்துப் போன கவரிமான் கொஞ்சம் இளைப்பா றக் கூடும். ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ - என்ற குறளுக்கு உரை எழுதும் போது, கல்வி, பொதுவுடமை என்று குன்றேறி கூறும் வள்ளுவரின் இரு கால்களையும் கட்டிக் கொண்டு, கதற வேண்டும் போலிருக்கிறது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் கவிஞர். இடம், காலம் என்ற மாறுபாடு கடந்து ஆண்- பெண் என்ற வேறுபாடு கடந்து, வருணம் களைந்து எல்லா உயிர்க்கும் கல்வியை பொதுவில் வைத்த விதத்தில் தான், தண்டனைக்காக உருவாக்கப்பட்ட தருமங்களை பின்தள்ளி, வள்ளுவ அறம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றயான் செத்தாருள் வைக்கப் படும்’ - என்பது ஓர் அற்புதக் குறள். இதற்கு பொருள் சொன்ன பலர், ஒத்தது என்பதை உலக நடப்பு என்று சொல்லிச் சென்றனர். ஆனால் கவிஞர் வைர முத்து தன் உணர்வைப் போல் பிறர் உணர்வையும் அறிந்து உதவி செய்து கடமையாற்றவனே உயிர் வாழத் தக்கவன். மற்றவர் எல்லாம் செத்தார் கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என்கிறார். எழுத்தாளர் ஜெய காந்தன் இங்கு பல பேர் செத்தது தெரியாமல், சுற்றித் திரிகிறார்கள் என்பார். உயிரோடு இருப்பது என்பது இயங்குதற் பாற்பட்டதன்று, இதயத்தின் ஈரத்தின் பாற்பட்டது. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனத் துவங்கும் குறளுக்கு, ‘பற்றறுத்த கடவுளைப் பற்றுக!’ என்று பொருள் சொல்லி பரவச நிலைக்கே சிலர் போய்விடு வார்கள். ஆனால் இவர், \பற்றறுத்த பெரியோரின் பற்றறுத்த உறுதியை பற்றிக் கொள்க!’ என்று புதிய பொருள் கொள்கிறார். ‘ஊழ்’ என்பதை சூழ்நிலைப் பண்பு என்று பொருள் கொள்ள வேண்டும் என்று கவிஞர் கூறுவதும் கருதத்தக்கது. கேள்வி என்ற அதிகாரத்தில் கேள்விச் செல்வம் என்பதை வலியுறுத்திச் சொல்வார் வள்ளுவர். கேட்கிற காதும், கேள்விக்குறி வடிவில்தான் இருப்பது சிறப்பு. செவி வாசல் எப்போதும் திறந்திருக்கும். வயிறு ஓர ளவுக்கே செரிக்கும். ஆனால், செவி எவ்வளவு அறி வையும் செரிக்கும் என்கிறார். ‘முறைகோடி மன்னவன் செய்யின் உரைகோடி ஒல்லாது வானம் பெயல்’ - என்ற குறளுக்கு கொடுங்கோல் அரசனின் ஆட்சி யில் மழை பெய்யாது என்று சொல்லி வந்த நிலை யில், முறை தவறும் ஆட்சி சுற்றுச்சூழலை பேணத் தவறும். அதனால் மழை பெய்யாது என்று கார்ப்ப ரேட் காலத்திற்கு ஏற்ப உரை சொல்கிறார் கவிஞர். ‘கண்ணோட்டம்’ என்பதற்கு தங்களது எண்ண