மருத்துவருக்கு விருது
சென்னை, செப்,2 மருத்துவத்துறையில் முன்னோடியாக விளங்கும் காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ். சந்திர குமாருக்கு சூப்பர் சென்னை அமைப்பு ஐகான் ஆஃப் த மந்த்’ விருதை வழங்கி கவுரவித்துள்ளது. மருத்துவத் துறையில் அவருடைய முன்னோடி பங்களிப்பு மற்றும் “இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்” என்ற சென்னையின் உலகளாவிய கண்ணியத்தை வலுப்படுத்தியதில் அவருடைய பங்கு ஆகியவற்றை இந்த அங்கீகாரம் சிறப்பிக்கிறது. இது, உலகின் மிக வாழத் தகுந்த நகரங்களில் ஒன்றாக சென்னையை மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த விருதைப்பெற்றது குறித்து டாக்டர். சந்திரகுமார் கூறுகையில், மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல – அது கருணை, அணு கல்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது. உலகத் தரத்திலான மருத்துவத்தை ஒவ்வொரு நோயா ளிக்கும் கொண்டு சேர்க்க தினமும் உழைக்கும் ஆயி ரக்கணக்கான காவேரி மருத்துவமனையின் சக ஊழியர் களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன் என்றார். முன்ன தாக இந்த விருதை சூப்பர் சென்னை நிர்வாக இயக்குநர் ரஞ்சீத் ரதோட் அவருக்கு வழங்கினார்.