tamilnadu

திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை, மே 15-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதனன்று (மே 15)உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி திருப்பரங்குன்றம் உட்பட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே திருப்பரங் குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி யிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுக லாம் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

;