tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு

சென்னை: மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஒடிசா மற்றும் அதனை  ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் - மேற்கு வங்க பகுதி களில் நிலவுகிறது. இதன் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது,  தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செப்.27 ஆம் தேதி கரையை கடக்கும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளிலும் செப்.25 முதல் 30 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ரூ.1,156 கோடியில்  ரிலையன்ஸ் குழுமம் புதிய தொழிற்சாலை

சென்னை: தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில்  தொழிற்சாலையை ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறி வித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகளை கொண்டுவருவதற்கான சமீபத்திய வெளிநாட்டு பயணத்தில் மொத்தம் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் 33  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் மசாலா, சிற்றுண்டி பொருட்கள், பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்  தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க வுள்ளது. இந்த புதிய ஆலையால் உள்ளூரைச் சேர்ந்த 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக-வின் திரைமறைவு வேலைகள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை உறவாடிக் கெடுப்பது என்ற திட்டத்துடன், பல்வேறு  திரைமறைவு வேலைகளை பாஜக செய்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலை மையிலான அதிமுக-வுடன் கூட்டணி என அறிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியோ, தாம் தான் முதல்வர் வேட்பாளர் என்றும், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று அமித் ஷா காதுகளுக்கு கேட்டுவிடாதபடி, அவருக்கு உள்ளாகவே மெதுவாக முனகிக் கொண்டிருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அதிக தொகுதி களைப் பெறுவதற்காக, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி  தினகரன் ஆகியோரை வைத்தும், அதிமுகவுக்குள் செங் கோட்டையனைத் தூண்டிவிட்டும் காய் நகர்த்தல்களை பாஜக  செய்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனை, அவரது அடையாறு வீட்டில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து 1 மணி நேரம் பேச்சு நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக ஓ. பன்னீர்செல்வமும் செங்கோட்டையனை சந்திக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். விரைவில், இவர்கள் அதிமுகவுக்கு உரிமை கோரும் ‘தர்மயுத்தம் 2.0’-வில் ஈடுபடு வார்கள் என்றும், இவர்களுக்கு பின்னணியிலிருந்து பாஜக அனைத்தையும் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

கவுரவ விரிவுரையாளர்கள்  பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்களை  தற்காலிகமாக தெரிவு செய்ய செப்.24 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை  அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.  கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் ஏற்கனவே  516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்  தொடர்ச்சியாக மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில் 881 தற்காலிக கவுரவ விரிவுரை யாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த முழு விவ ரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளன.

‘போலி’ மாம்பழம்!

விழுப்புரம்: அன்பு மணி தரப்பு போலி ஆவ ணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்று வந்து உள்ளதாக ராமதாஸ் குற்றம் சாட்டினார். மேலும், “போலி ஆவ ணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்ற அன்பு மணியின் வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அள வுக்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம்” என ராமதாஸ் கூறியுள்ளார்.

‘பேச்சுக்கே இடமில்லை’

சென்னை: எடப்பாடி பழனிசாமியை ஒருபோ தும் முதல்வர் வேட்பாள ராக ஏற்க முடியாது என அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப் பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் பேச்சுக்கே இட மில்லை. எடப்பாடி இருக் கும் வரை தேசிய ஜனநா யக கூட்டணிக்கு வரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அண்ணாமலை முயற்சி யால்தான் என்டிஏ கூட்ட ணியில் சேர்ந்தோம் என்றும் விளக்கம் அளித் தார்.

அறிவுசார் நகரம்

 திருவள்ளூர்: ஊத்துக் கோட்டை செங்காத்தக் குளத்தில் அறிவுசார் நகரம் அமைக்க தமிழ் நாடு அரசு டெண்டர்  கோரியது. ரூ.89 கோடி யில் உட்கட்டமைப்பு பணிகளை மேற் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள் ளது. சாலை, மழைநீர் வடிகால், சிறுவாய்க்கால் பாலங்கள், கழிவுநீர் குழாய்களை அமைக்க  டெண்டர் கோரப்பட்டு உள்ளது. முதல்கட்ட மாக 413.25 ஏக்கரில்  அறிவுசார் நகரத்துக் கான உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. போலீஸ் சம்மன் சென்னை: திரு மணம் செய்து கொள்வ தாக ஏமாற்றிய புகாரில்  மாதம்பட்டி ரங்க ராஜுக்கு போலீஸ்  சம்மன் அனுப்பி யுள்ளது. ஆடை வடி வமைப்பாளர் ஜாய் கிரி சில்டா அளித்த புகார்  தொடர்பான விசார ணைக்கு செப்.26 ஆம்  தேதிக்குள் ஆஜராக  மாதம்பட்டி ரங்க ராஜுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பினர்.