வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 16- ஆம் தேதி தொடங்கி யது. பருவமழை தொடங்கியதிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அக் டோபர் 21 அன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப் பெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக்.19) கோவை மாவட்ட மலைப்பகுதி கள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென் காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி யுள்ளது.
