டிக்கர்ஸ் (Diggers) என்று அழைக் கப்படும் ஆங்கில விவசாய கம் யூனிஸ்டுகள் குழுவின் தலைவரும், அதன் கோட்பாட்டாளருமான ஜெரார்டு வின்ஸ்டான்லி (கிறிஸ்தவ கம்யூனிஸ்ட்) 1609 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று இங்கிலாந்தின் லங்காஷயர் குடும்பத்தில் பிறந்தார். பருத்தி நூல் நூற்பு மற்றும் துணி நெசவு செய்த முதல் இடம் லங்காஷயர்தான். மேலும் இது பருத்தி, ஜவுளி ஆலைகளின் மையமாக இருந்தது. ஒரு துணி வியாபாரியாக இருந்த ஜெரார்டு, பெரும் பணக் காரர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தவும், அவை ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நில உரிமை யாளர்களை எதிர்த்து போராடுவதற்காகவும், 1649-50 களில் டிக்கர்ஸ் இயக்கத்தை (Diggers Movement) நிறுவினார். இவரது பேச்சுக்கள் கம்யூனிஸ்ட் மற்றும் பொருள்முதல்வாத கருத் துகளை பிரதிபலித்தன. இவர் உலகளாவிய மத சகிப்புத் தன்மையின் வழக்கறிஞராக திகழ்ந்தார். ஏழைகளுக்கு விவசாயம் செய்ய நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடந்த இங்கிலாந்து உள்நாட்டுப் போர்கள், அரசருக்கும் பெரும் நில உரிமையாளர்களுக்கும் எதிராக நடத்தப்படுவதாக கருதப்பட்டது. 1640-களின் பிற்பகு தியில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியது. 1649-களில் டிக்கர்ஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. இது, பொது நிலங்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு உரிமை கோரும் உள்ளூர் நில உரிமை யாளர்களின் மனதில் விரோதம் வளர காரணமாக அமைந்தது. இதை எதிர்த்து டிக்கர்ஸ் இயக்கத்தினர் சட்ட மற்றும் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, 1650 இன் இறுதியில், பெரும் நில உடமையாளர்களின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது. ஜெரார்டு வின்ஸ்டான்லியின் நூல்கள், இன்று பல இயக் கங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளன. ஏழைகளுக்கு நில உரிமை கிடைக்க வேண்டுமென போராடிய ஜெரார்டு, 1676 ஆம் ஆண்டு செப்.10 அன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.