tamilnadu

img

இடதுசாரிகள் மாபெரும் வெற்றி!

இடதுசாரிகள் மாபெரும் வெற்றி!

வெனிசுலா நாடாளுமன்றம் - மாகாணங்களுக்கு தேர்தல்

கராகஸ், மே 27 - வெனிசுலா நாடாளுமன்றம் மற் றும் மாகாணங்களுக்கான தேர்தல் களில் ஐக்கிய சோசலிச கட்சி (PSUV) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. 285 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 24 மாநில ஆளுநர்கள், 260 சட்டமன்ற தொகுதிகளுக்காக தேர்தல் மே 25 அன்று நாடு முழுவதும் 16 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் நடை பெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 54 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, தேர்தல்களில் ஐக்கிய சோசலிச கட்சி (PSUV) கூட்டணி 82.7 சதவிகித வாக்குகள் (45.5 லட்சம் வாக்குகள்) பெற்று முதலிடம் பிடித்துள்ளது.  இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி களின் கூட்டணியான ஜனநாயக கூட்ட ணியில் உள்ள இரு கட்சிகளும் முறையே 6.25 சதவிகிதம் - 5.18 சத விகிதம் என வாக்குகளை பெற்றுள்ளன. மரியா கொரினா மச்சாடோ தலை மையிலான தீவிர வலதுசாரியான எதிர்க்கட்சிகள், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை புறக்கணிக்குமாறு மக்களைத் தூண்டி  விட்டன. அமெரிக்காவின் ஆதரவுடன் பல ஆண்டுகாலமாக இக்கட்சிக் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இடதுசாரி அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு வருகின்றன. இக்கட்சிகள் 2024 ஜூலை 28 அன்று நடந்த வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் மதுரோ மூன்றாவது முறை யாக பெற்ற வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வெற்றியை புறக்கணித்ததுடன் தீவிர வலதுசாரி பாதையில் உள்ள தங்களின் கட்சியே வெற்றிபெற்றது என அறிவித்துக் கொண்டனர்.