tamilnadu

img

அழகு நடை போட்டு சென்ற யானைக்கூட்டம்

அழகு நடை போட்டு சென்ற யானைக்கூட்டம்

கோவை, ஆக.12- மஞ்சூர் சாலையில் குடும்பமாக அழகு நடை போட்டு காட்டுயானை கூட்டம் சென்ற  வீடியோ காட்சிகள் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் திலிருந்து முள்ளி மஞ்சூர் செல்லும் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப் போது முள்ளி என்ற இடத்தின் அருகே சாலை யில் ஒரு பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட சில  வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது  சாலையின் நடுவில் இரண்டு குட்டியுடன் ஆறு  யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் நடுரோட்டில் வந்தது. நீண்ட தூரம் பின்னால் வந்த அரசு பேருந்தின் முன்புறம் சாலையை மறித்தபடி யானைகள் அழகு நடைபோட்டு  சென்றபடி இருந்தது. சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையிலேயே சென்ற யானைகள் வழியில் எதிர்பட்ட காரை  ஏதும் செய்யாமல் அமைதியாக நகர்ந்து வழி விட்டு சென்றன. இதுகுறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.