tamilnadu

img

கூட்டம் ஓட்டாக மாறாது

‘கூட்டம் ஓட்டாக மாறாது’

சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங் களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, “நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மட்டும்  விமர்சனங்கள் எழுவதில்லை. நடிக்க வந்தாலும் விமர்சனங் கள் எழும். விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக  மாறாது. அது அனைத்துத் தலைவர்களுக்கும் பொருந்தும்.  இது விஜய்க்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள் என்பதுதான் நான் எல்லா அரசி யல்வாதிகளுக்கும் வைக்கும் வேண்டுகோள். நான் குடிமக னாக இருந்தாலும், இதே வேண்டுகோளைத்தான் முன் வைத்திருப்பேன்” என தெரிவித்தார்.