tamilnadu

img

ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் போனஸ் ஏமாற்று

ரயில்வே ஊழியர்களுக்கான  78 நாள் போனஸ் ஏமாற்று 

கிடைப்பதோ வெறும் ரூ.17 ஆயிரம்

சென்னை, செப். 24 - ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் போனஸ் என்பது ஏமாற்று அறி விப்பு என தட்சிண ரயில்வே ஊழி யர்கள் சங்கம் (DREU) விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. அரிலால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: போனசாக பல லட்ச ரூபாய் தருவது போன்ற அறிவிப்பு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் என ஒன்றிய அரசு அறிவித் துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக 78 நாள் போனஸை ஒன்றிய   அரசு அறி வித்து வருகிறது. 78 நாள் என அறிவிப்பு வரும் போது, ரயில்வே ஊழியர்கள் பல லட்ச ரூபாய் போனஸ் பெறுவதாக பொதுமக்கள் நினைக்கின்றனர்.  ஆனால் உண்மை என்ன? 46 ஆயிரம் ரூபாய் தந்திருக்க வேண்டும்  போனஸ் என்பது கொடுபடா சம்ப ளம். அது உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ரயில்வேயில் குறைந்தபட்ச ஊதி யமே 18 ஆயிரமாக உள்ளது. அப்படி என்றால் 18,000 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியர் 46,158 ரூபாய் போனசாக பெற வேண்டும். அதற்கு மேல் ஊதி யம் பெறுபவர்கள் அதற்கு ஏற்ப உயர்ந்த போனஸ் பெற வேண்டும்.  ஆனால் ஒரு ஊழியர் எவ்வளவு சம்பளம் பெற்றாலும் போனசுக்கு மாதச் சம்பளமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது வெறும் ரூ. 7,000 ஆயிரம் மட்டும் தான்.  உற்பத்தி திறனுக்கு ஏற்ற போனஸ் எங்கே? இதன்படி தொழிலாளர்கள் பெறும் உண்மையான போனஸ் தொகை 17,951 ரூபாய் மட்டும்தான். உற்பத்தித் திறனு க்கு ஏற்ப வழங்கப்படுவதற்குப் பெயர் தான் போனஸ். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே உற்பத்தித் திறன் அதிகரித்து வருகிறது. ஆனால் போனஸ் நாட்கள் உயர்வதில்லை. 2024-25 நிதியாண்டில் ரயில்வே யில் பயணிகள் போக்குவரத்து வரு வாய் ரூ. 75,239 கோடியாகவும் சரக்கு போக்குவரத்து ரூ. 1,75,302 கோடியாக வும் ஒட்டு மொத்த வருவாய் ரூ.2.65 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. ஆனால், போனஸ் நாட்கள் உயர்வதில்லை. எனவே உற்பத்தித் திறனுக்கு ஏற்ப  போனஸ் நாட்களை உயர்த்த வேண் டும். போனஸ் கணக்கீட்டிற்கு ரூ.7,000 எனும் உச்சவரம்பை அகற்றி உண்மை யான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும் என்று தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (DREU) வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.