700 லிட்டர் மானிய ம.எண்ணெய் பறிமுதல்
குழித்துறை, செப்.28- கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மானிய மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கடை அடுத்த ஐரேனிபுரம் பகுதியில் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அந்த வழியாக வந்த சொகுசு காரை துரத்தி சென்று மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அதில் சுமார் 700 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மார்த்தாண்டம் மண்ணெண்ணெய் மொத்த விற்பனைக் கூடத்தில் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்தை விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும்  மண்ணெண்ணை கடத்தியவர்கள்  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
